அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று இந்த போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் சிக்கல் நீடித்தாலும், அமைதிக்கான வாய்ப்பாக இந்த முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது.

இருப்பினும், ஈரானின் பிடிவாதமான போக்கினால் பிராந்தியத்தில் பதற்றம் குறையாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. மறுபுறம், ஈரானுடன் போரைத் தொடங்க இஸ்ரேல் முழு வீச்சில் தயாராகிவிட்டதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் முக்கிய இலக்குகளைத் தேர்வு செய்துவிட்டதாகவும், அமெரிக்காவின் ஒப்புதல் கிடைத்தவுடன் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த முறை தாக்குதல் மிகவும் கொடியதாக இருக்கும் என்றும், ஈரானின் மின்சாரம் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளைத் தகர்த்து அந்த நாட்டைப் பொருளாதார ரீதியாகப் பின்னுக்குத் தள்ளப் போவதாகவும் இஸ்ரேல் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.