தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வரலாறு காணாத வாக்குப்பதிவு, மாநிலத்தின் ஆட்சி மாற்றத்திற்கான தெளிவான அறிகுறி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் மாற்றத்திற்காக வாக்களித்த ஒவ்வொருவருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

​தற்போதைய ஆட்சிக்கு எதிராக மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருந்ததாகவும், அதை அகற்றுவதற்காகவே மக்கள் பெருந்திரளாக வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் அமைதிப்புரட்சியைச் செய்பவர்கள்” என்று பாராட்டிய அவர், நேற்று பதிவான வாக்குகளின் வேகத்தைப் பார்க்கும் போதே ஆட்சி மாற்றம் உறுதி என்பது அனைவருக்கும் புரியும் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.