தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தனது கட்சித் தொண்டர்களுக்கு நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “இவர்களுக்கு என்ன அரசியல் தெரியும்? இவர்களால் எப்படித் தாக்குப்பிடிக்க முடியும்?” என்று தங்களை ஏளனம் செய்தவர்களுக்கு, செயலின் மூலம் பதிலடி கொடுத்துள்ளோம் என்று அவர் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, வாக்குச் சாவடிகளில் கண்ணும் கருத்துமாகப் பணியாற்றிய முகவர்களுக்கும், இரவு பகலாக உழைத்த கழகத் தோழர்களுக்கும், அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக விஜய் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சுமார் 85 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், விமர்சனம் செய்தவர்களின் வாயை அடைக்கும் வகையில் பணியாற்றிய தொண்டர்களைப் பெருமிதத்துடன் பாராட்டியுள்ளார். விஜய்யின் இந்த “பதிலடி” அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.