தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு புதிய சாதனை படைத்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் உருக்கமான நன்றியைத் தெரிவித்துள்ளார். தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய பாட்டி, அம்மா, அக்கா, தங்கை என அனைத்துக் குடும்ப உறவுகளையும் சிரம் தாழ்ந்து வணங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தனது ‘குட்டி நண்பா நண்பீஸ்க்கு’ விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கங்கள் என அவர் அன்பைப் பகிர்ந்துள்ளார்.

​தவெக-வை ஏளனம் செய்தவர்களுக்கும், “இவர்களுக்கு என்ன அரசியல் தெரியும்?” என்று விமர்சித்தவர்களுக்கும் தனது கட்சி முகவர்கள் மற்றும் தொண்டர்கள் செயல் மூலம் பதிலடி கொடுத்துள்ளதாக அவர் பெருமிதப்பட்டுள்ளார். “நம்பிக்கையோடு இருப்போம், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்” எனப் பதிவிட்டுள்ள அவர், இந்தத் தேர்தல் மாற்றம் காணும் ஒரு வரலாற்றுத் திருவிழா என்பதையும் தனது பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.