தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாகப் பரவிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது வீட்டில் எந்தவித சோதனையும் நடத்தப்படவில்லை என வருமான வரித்துறை திடீர் விளக்கம் அளித்திருந்தது. அதிகாரிகளின் இந்த மறுப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் குழப்பத்தையும் விவாதத்தையும் கிளப்பியது.

​இந்நிலையில், வருமான வரித்துறையின் விளக்கத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைச் செல்வப்பெருந்தகை ஆதாரமாக வெளியிட்டுள்ளார். தனது வீட்டிற்கு வந்த அதிகாரிகள் யார் என்பதையும், அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படப் போகிறது என்பதையும் கேள்வியாக முன்வைத்துள்ள அவர், ஆதாரத்துடன் களமிறங்கியிருப்பது இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.