தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருப்பது அதிமுக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்துள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உற்சாகமாகத் தெரிவித்துள்ளார். சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த அவர், தேர்தல் முடிவுகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மே 4-ம் தேதிக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள இபிஎஸ்-க்கு முன்கூட்டியே வாழ்த்து தெரிவிக்க வந்ததாகக் கூறி அதிர வைத்தார். திமுகவின் வாக்குகள் பல இடங்களுக்குப் பிரிந்துள்ளதால், அதிமுக கூட்டணியின் வெற்றி தடுக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டதாக அவர் தனது கணிப்பை முன்வைத்துள்ளார்.
