சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 வரையில் குறைந்துள்ளது. இதன் காரணமாக 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,12,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15,382 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,23,056 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இன்று வெள்ளியும் கிராமுக்கு 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,65,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
