தமிழகத் தேர்தலின் போது பேருந்து நடத்துநர் ஒருவர், தனது பேருந்து வாக்குச்சாவடி அருகே வந்தபோது அதை நிறுத்திவிட்டு, விறுவிறுவெனச் சென்று வாக்களித்த சம்பவம் வைரலாகி வருகிறது. பயணிகளிடம் அனுமதி பெற்றுவிட்டுத் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய அவர், அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் பேருந்தில் ஏறித் தனது பணியைத் தொடர்ந்துள்ளார்.
எல்லா கடமையும் விட… இது தான் பெரிய கடமை🔥BUS-அ நிறுத்திட்டு ஓடி போய் Vote போட்டு வந்த Conductor👆#Bus #Conductor #Tamilnadu #Vote #Election2026 #TNElection #Public pic.twitter.com/gWxDtzdI30
— Galatta Media (@galattadotcom) April 23, 2026
நேரம் இல்லை என்று வாக்கு போடத் தயங்கும் பலருக்கு மத்தியில், பணியின் இடையிலும் ஓட்டுப் போட்ட இவரின் செயல் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. கடமை தவறாத இந்த நடத்துநரின் வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் டிரெண்டாகி, பலருக்கும் உத்வேகத்தை அளித்து வருகிறது.
