தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தல் களம் இதுவரை கண்டிராத ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

1951-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் தேர்தல் வரலாற்றிலேயே, இந்த முறைதான் மிக அதிகபட்சமாக 84.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதற்கு முன்பு 2011-ல் பதிவான 78 சதவீத வாக்குப்பதிவே சாதனையாக இருந்த நிலையில், தற்போது அந்தத் தடையை மக்கள் சுக்குநூறாக உடைத்துள்ளனர்.

காலை 7 மணிக்கே நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள், மாலை 6 மணி வரை சோர்வின்றி தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்;

இதுவரை 4.8 கோடிக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கரூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் வாக்குப்பதிவு 90 சதவீதத்தைத் தாண்டி மிரட்டியுள்ளது.

இந்த மெகா வாக்குப்பதிவு ஆளுங்கட்சிக்குச் சாதகமா அல்லது மாற்றத்திற்கான அறிகுறியா என்ற விவாதம் இப்போதே அரசியல் மேடைகளில் அனலைக் கிளப்பியுள்ளது.