சமீபகாலமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் மோதல்கள் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இரண்டு பள்ளி மாணவிகள் கழிவறையில் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொள்ளும் வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
இந்த மோதல் ஒரு சாதாரண அறிமுகத்தில் தொடங்கி, ஒருவரை ஒருவர் குடும்பத்தை இழுத்துத் திட்டிப் பேசத் தொடங்கியதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
Girl fighting in the bathroom of their school 💀 pic.twitter.com/ug8RS5zt4s
— Alisha (@alisha_sunona) April 22, 2026
நீல நிற டீ-சர்ட் அணிந்த மாணவி ஒருவரிடம், மற்றொரு மாணவி “உன் பெயர் என்ன?” என்று கேட்க, அதற்கு அவர் “உன் அப்பாவிடம் போய்க் கேள்” என அலட்சியமாகப் பதிலளித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த முதல் மாணவி, “எங்க அப்பாவை இழுக்காதே” என்று கூறி அந்த மாணவியை ஓங்கி அறைந்துள்ளார்.
இதன்பிறகு வாக்குவாதம் முற்றி, “நீ எங்கே வசிக்கிறாய் என்று எனக்குத் தெரியும், உன் அண்ணன் எங்கே சுற்றுகிறான் என்று தெரியும்” என அந்த மாணவிகள் மாற்றி மாற்றி ஒருவருக்கொருவர் குடும்பத்தைப் பற்றித் தரக்குறைவாகப் பேசியுள்ளனர்.
இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற மாணவிகள், கழிவறை என்றும் பாராமல் ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளித் தாக்கிக் கொண்டனர்.
இந்த வீடியோவை அங்கிருந்த மற்ற மாணவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “பள்ளிக் குழந்தைகள் இப்படிச் சண்டையிடுவது வருத்தமளிக்கிறது” என ஒருபுறம் கருத்துத் தெரிவித்தாலும், பலரும் இந்த மோதலை கிண்டல் செய்தும் மீம்ஸ்கள் போட்டும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
மாணவர்களின் இத்தகைய நடத்தை மாற்றங்கள் குறித்துப் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் இச்சம்பவம் பெரிய அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
