பார்வைத் திறன் இல்லாதவர்களுக்கு மற்ற உணர்வுகள் மிகக் கூர்மையாக இருக்கும் என்பதற்குச் சான்றாக ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. முடி திருத்தும் கடை ஒன்றிற்குச் சென்ற பார்வையற்ற முதியவர் ஒருவரிடம், அங்கிருந்த கடை உரிமையாளர் ஒரு சுவாரஸ்யமான சவாலை வைத்தார்.
அதாவது, கடையில் ஓடிக்கொண்டிருக்கும் நேரக் கணக்கீட்டு கருவியை சரியாக 10 வினாடிகளில் நிறுத்த வேண்டும் என்பதுதான் அந்தச் சவால். கண்களால் பார்க்க முடியாவிட்டாலும், தனது மனக்கணக்கின் மூலம் நொடி முள்ளின் வேகத்தைத் துல்லியமாகக் கணித்த அந்த முதியவர், பட்டனை அழுத்தியபோது டைமர் சரியாக 10 வினாடியில் நின்றது.
Görme engelli bir adamın, gittiği berberde bulunan süre sayacını tam 10 saniyede durdurmayı başardı. Bu olayın ardından berberden ömür boyu bedava saç kesimi kazanmış oldu. pic.twitter.com/qyJQIE9W2h
— Anında (@anindanet) April 21, 2026
இதைக் கண்டு வியப்பின் எல்லைக்கே சென்ற கடையின் உரிமையாளர், தனது வாக்கை நிறைவேற்றும் வகையில், அந்த முதியவருக்கு வாழ்நாள் முழுவதும் தனது கடையில் இலவசமாக முடி திருத்தம் செய்து கொள்ளப்படும் என அறிவித்தார். அதிர்ஷ்டத்தை விடவும், அந்த முதியவரின் தன்னம்பிக்கையும் துல்லியமான கணிப்புமே இணையவாசிகளின் பாராட்டுகளை அள்ளி வருகிறது.
