லண்டனின் பிரபலமான சோஹோ (Soho) பகுதியில் உள்ள இரவு விடுதிக்கு வெளியே, இரு பெண் ‘இன்ப்ளூயன்சர்களுக்கு’ இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவரை கார் ஏற்றி சக தோழி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் வசித்து வரும் பிரபலமான அழகுக்கலை நிபுணர் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலம் கிளாடியா கிளாம். இவருக்கும், மற்றொரு பிரபலமான இன்ப்ளூயன்சரான கேப்ரியல் கேரிங்டன் என்பவருக்கும் இடையே நீண்டகாலமாக தொழில் போட்டி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில், அங்குள்ள ‘இன்கா’ இரவு விடுதிக்கு வெளியே இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியது. இருவரும் சாலையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
🔥🚨BREAKING: IG model Klaudiaglam has reportedly passed away after being run over by a car outside a nightclub in Soho driven by a “rival” social media star who has not been named yet.
Videos of the incident went viral on social media, with bystanders being heard shouting,… pic.twitter.com/59boDADftF
— Dom Lucre | Stealer of Narratives (@dom_lucre) April 20, 2026
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த 29 வயதான கேப்ரியல் கேரிங்டன், தனது மெர்சிடிஸ் காரை எடுத்துக்கொண்டு வந்து கிளாடியா கிளாம் மீது அதிவேகமாக ஏற்றியுள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட கிளாடியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தக் கொடூரச் சம்பவத்தின்போது அங்கிருந்த 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும் படுகாயமடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் 3.6 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்ட கேப்ரியல் கேரிங்டனை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை முயற்சி, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஆபத்தான முறையில் கார் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவள் அவர் மீது காரை ஏற்றுகிறாள் என்று சம்பவ இடத்திலிருந்தவர்கள் அலறும் சத்தம் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
