போரினால் சிதைந்து போயுள்ள காசா பகுதியில், ஹமாஸ் அமைப்பினர் அங்குள்ள அப்பாவிப் பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவதாக எழுந்துள்ள புகார்கள் உலகையே அதிரவைத்துள்ளன.
உணவும் மருந்தும் இன்றித் தவிக்கும் விதவைகள், விவாகரத்தான பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களைக் குறிவைத்து ஹமாஸ் உறுப்பினர்கள் இந்த அநாகரீகச் செயலில் ஈடுபடுவதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களைத் தருவதாக ஆசை காட்டி, அதற்குப் பதிலாகப் பெண்களைத் தவறான உறவுக்கு வற்புறுத்துவதாக நியூயார்க் போஸ்ட் (NY Post) செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு பெண் அளித்த பேட்டியில், “உதவிப் பொட்டலம் தருவதாகக் கூறி எங்களை அழைப்பார்கள், ஆனால் அதற்குப் பதிலாக சில காரியங்களைச் செய்யச் சொல்லி வற்புறுத்துவார்கள்” எனத் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
38 வயதான ஆறு குழந்தைகளின் தாய் ஒருவருக்கு, வெறும் 30 டாலர் பணம் மற்றும் ஒரு பெட்டி மருந்துக்காகப் பாலியல் கட்டாயங்கள் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ய வேண்டிய அமைப்புகளே, பெண்களின் வறுமையைப் பயன்படுத்தி இப்படிச் சீரழிப்பது கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
இது ஒரு தனிப்பட்ட நபரின் செயல் அல்ல, அந்த அமைப்பே இப்படித்தான் செயல்படுகிறது எனப் பெண்கள் குற்றம் சாட்டுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
