தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து நடிகர் கஞ்சா கருப்பு தனது பாணியில் கலகலப்பாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். பிரச்சார மேடையில் மைக் பிடித்த அவர், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை சுவாரஸ்யமாக எடுத்துரைத்தார்.
குறிப்பாக, “வெயில் கொளுத்துதுன்னு யாரும் கவலைப்படாதீங்க, ஏசி-யே வாங்க வேண்டாம். நம்ம எடப்பாடியார் கொடுக்கும் பிரிட்ஜைத் திறந்து வைத்தாலே போதும், வீடே குளுகுளுன்னு மாறிடும்” என்று அவர் பேசியது அங்கிருந்த தொண்டர்களிடையே பலத்த சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.
“AC-யே வாங்க வேண்டாம்.. எடப்பாடியார் கொடுக்கும் ஃபிரிட்ஜை திறந்து விட்டாலே குளுகுளுனு காத்து வரும்”..
அ.தி.மு.க வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக நடிகர் கஞ்சா கருப்பு பிரசாரம்.!#AIADMK | #GanjaKaruppu | #ElecttionCampaign | #Candidate | #Politics | #PolimerNews pic.twitter.com/O24MvfjdeY
— Polimer News (@polimernews) April 21, 2026
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை அடுக்குவதோடு மட்டுமல்லாமல், தனது டிரேட்மார்க் நகைச்சுவை பாணியில் எதிரணியினரையும் வம்புக்கு இழுத்து வருகிறார் கஞ்சா கருப்பு.
“மக்களுக்கு என்ன வேணும்னு எடப்பாடியாருக்குத் தெரியும், அதனாலதான் பிரிட்ஜ் குடுக்குறோம்னு சொல்லி இருக்காரு” என அவர் பேசிய வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. சீரியஸான தேர்தல் களத்தில் கஞ்சா கருப்புவின் இந்தப் பேச்சு ஒரு ‘ஜாலி’ ட்விஸ்ட்டாக அமைந்துள்ளது.
