தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி அதாவது வருகிற வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைவதாக இருந்தது. இதனை முன்னிட்டு கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இதேபோன்று முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சென்னை நந்தனத்தில் தன்னுடைய இறுதி கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
இதேபோன்று எடப்பாடி பழனிச்சாமி, விசிக, பாமக, தேமுதிக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தங்களுடைய பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளனர். மேலும் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்துள்ள நிலையில் விதிகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டால் அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும். மேலும் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் தற்போது ஏப்ரல் 23ஆம் தேதியை ஒட்டுமொத்த அரசியல் களமும் உற்றுநோக்கி காத்திருக்கிறது.
