நாவிற்கு ருசியாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுகளை நாம் அனைவரும் விரும்பி வாங்குகிறோம். ஆனால், அந்த சிப்ஸ் பாக்கெட்டுகளுக்குள் அடைக்கப்படுவதற்கு முன்னால், அவை எவ்வளவு மோசமான சூழலில் தயாரிக்கப்படுகின்றன என்பது குறித்த உண்மைகள் இப்போது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.

பல தொழிற்சாலைகளில் உருளைக்கிழங்குகள் கழுவப்படாமலும், தரையில் கொட்டி கால்களால் மிதிக்கப்பட்டும், அழுக்கான எண்ணெய்களில் பொறிக்கப்படுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாக்கெட்டுகளில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, நம் வீட்டு குழந்தைகளுக்கு நாம் எதை வாங்கிக் கொடுக்கிறோம் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

 

“அழுக்கான கைகள், திறந்தவெளியில் கிடக்கும் சிப்ஸ் துண்டுகள், பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்” இவைதான் பல உள்ளூர் சிப்ஸ் தயாரிப்பு நிலையங்களின் உண்மை நிலை. இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “இலாபத்திற்காக மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடுவதா?” எனப் பொதுமக்கள் கொந்தளித்து வருகின்றனர்.