திருமணமான பல வீடுகளில் சாப்பாட்டைப் பற்றி கணவன்மார்கள் குறை சொல்வதைப் பார்த்திருப்போம். ஆனால், இங்கே ஒரு கணவன் தனது மனைவி வீட்டில் இருக்கும் விதத்தைப் பார்த்து ஆக்ரோஷமடைந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பல நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வந்த அந்த நபர், தனது மனைவி தலை கலைந்து, சாதாரண டி-சர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து இருப்பதைக் கண்டு கோபத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார்.

“இப்படி அலங்காரம் இல்லாமல் உன்னைப் பார்ப்பதால்தான் எனக்கு வீட்டுக்கே வரப் பிடிக்கவில்லை; ஒரு பொட்டு, மேக்கப் கூட இல்லாமல் இப்படியா இருப்பாய்?” என்று அவர் கத்தியதை அவரது மனைவியே வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்தத் நபரை வறுத்தெடுத்து வருகின்றனர். “ஒரு பெண்ணின் அழகு குணத்தில்தான் இருக்கிறது, மேக்கப்பில் இல்லை” என்றும், “வெளியே வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வரும் பெண்ணிடம் இப்படிப் பேசுவது அநாகரீகம்” என்றும் கமெண்ட்களைக் குவித்து வருகின்றனர்.

அதேசமயம், தம்பதிகள் ஒருவருக்காக ஒருவர் தங்களைப் பராமரித்துக் கொள்வதில் தவறில்லை என்ற விவாதமும் ஒருபுறம் போய்க்கொண்டிருக்கிறது.