நடிகர் சிபி சத்யராஜ், தனது குடும்பத்தினர் (சத்யராஜ் மற்றும் திவ்யா சத்யராஜ்) திமுக பக்கம் நின்றாலும், தான் என்றும் ‘விஜய் அண்ணா’ பக்கமே என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 1993-இல் பொள்ளாச்சியில் விஜய்யை முதன்முதலில் சந்தித்தது முதல், தனது காதல் மற்றும் சினிமா பயணத்தில் விஜய் ஏற்படுத்திய தாக்கம் வரை அனைத்தையும் அந்த கடிதத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

​”நீங்கள் இனி நடிக்கப் போவதில்லை என்பதை ஏற்க முடியவில்லை என்றாலும், உங்கள் புதிய அரசியல் பாதையை ஒரு தம்பியாக நான் மதிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ள சிபி, ‘வென்று வா தலைவா’ என வாழ்த்தியுள்ளார். விஜய்யின் குட்டிக் கதைகள் தனக்குச் சுயமுன்னேற்றப் புத்தகங்களை விடப் பெரிய பாடங்களைக் கற்றுக்கொடுத்ததாகவும், அவர் அரசியலில் தடம் பதிக்கத் தான் எப்போதும் துணையாக இருப்பேன் என்றும் சிபி சத்யராஜ் அந்த கடிதத்தில் சூளுரைத்துள்ளார்.