கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தீவிர இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி கே.ஏ. செங்கோட்டையன், இன்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது கண்ணீர் விட்டு அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தான் தவெக-வில் இணைந்த பிறகு, கட்சியின் பேனர்கள் மற்றும் மேடைகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் பயன்படுத்துவது குறித்து தவெக தலைவர் விஜய்யிடம் பேசியதாகக் குறிப்பிட்டார்.

​அதற்கு விஜய் எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாக அனுமதி வழங்கியதை நினைவு கூர்ந்த செங்கோட்டையன், விஜய்யின் அந்தப் பெருந்தன்மையைத் தழுதழுத்த குரலில் விவரித்தார். அரசியலில் ஒருகட்டத்தில் தான் ஓரங்கட்டப்பட்டு ஒதுக்கப்பட்ட போது, தனக்குக் கௌரவமான ஒரு இடத்தையும், அடைக்கலத்தையும் கொடுத்தவர் தம்பி விஜய் தான் என்று அவர் உணர்ச்சி பொங்கக் கூறினார். செங்கோட்டையனின் இந்த உருக்கமான பேச்சு அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

“>