செஞ்சி தேர்தல் பரப்புரையில் பேசிய முகுந்தன், பாமக தலைவர் அன்புமணியை மிகக் கடுமையாகச் சாடினார். “துரோகத்தின் உருவமாக இருக்கும் அன்புமணிக்கு மக்கள் ஏன் ஓட்டுப் போட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பிய அவர், ராமதாஸ் உடல்நலமில்லாமல் மயங்கியபோது கூட, அதைக் கண்டுகொள்ளாமல் அன்புமணி தீவிரமாகப் பிரச்சாரம் செய்ததாகக் குற்றம் சாட்டினார்.

​பெற்ற தந்தையையே மதிக்காமல் ‘அல்வா’ கொடுத்த அன்புமணி, பொதுமக்களுக்கு மட்டும் என்ன செய்துவிடுவார் என்று முகுந்தன் காட்டமாகக் கேட்டார். இதுவரை ‘துரோகி மணி’ என்று அழைக்கப்பட்ட அவர், இனி ‘அல்வா மணி’ என்றுதான் அழைக்கப்படுவார் என கிண்டலாகப் பேசிப் பரபரப்பை ஏற்படுத்தினார்.