“தர்மம் தலைகாக்கும், தீவினை சாக்கடையில் தள்ளும்” என்பதற்குச் சான்றாக ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. எக்ஸ் தளத்தில் வெளியான அந்தக் காணொளியில், இளைஞர் ஒருவர் சாலையில் அமைதியாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஒரு தெரு நாயைத் தேவையின்றித் தூக்கி, வான்நோக்கி வேகமாகச் சுற்றுகிறார். ஆனால், அந்தப் பாவம் அவரைச் சும்மா விடவில்லை.
Instant-Karma Kalesh (BOY SPINS STRAY DOG, ENDS UP FALLING INTO DRAIN HIMSELF) pic.twitter.com/uHk9TdDDCg
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 20, 2026
சுற்றிய வேகத்தில் நிலைதடுமாறிய அந்த நபர், அங்கிருந்த சாக்கடைக்குள் தலைகுப்புற விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அந்த நாய் எவ்விதக் காயமும் இன்றி அங்கிருந்து தப்பித்துச் சென்றது. ஆனால், நாயைத் துன்புறுத்த நினைத்த அந்த நபரோ சாக்கடை நீரில் நனைந்து அவதிப்படும் காட்சிகள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. “அப்பாவிகளைத் துன்புறுத்தினால் கர்மா உடனே தண்டனை கொடுக்கும்” என இந்த வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
