தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் நேரடியாகப் போட்டியிடுவதால் ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் அந்தத் தொகுதியின் மீது திரும்பியுள்ளது.
விஜய்யின் அரசியல் வருகைக்குத் திரைத்துறையினர் பலரும் தங்களின் ஆதரவைத் தெரிவித்து வரும் நிலையில், தற்போது நடிகர் ஜெய்யும் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.
Kollywood actor @Actor_Jai campaigning for @TVKVijayHQ 🙏 pic.twitter.com/WPnP6cK1FZ
— Vijay Fans Trends (@VijayFansTrends) April 20, 2026
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் அண்ணன் விஜய்க்கு உங்கள் பொன்னான வாக்குகளை அளியுங்கள்” என உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தத் தகவல் இணையத்தில் தீயாகப் பரவி வரும் நிலையில், ஏற்கனவே சிபி சத்யராஜ், விடிவி கணேஷ் மற்றும் ராஜு ஜெயமோகன் போன்ற பிரபலங்கள் தவெகவுக்காகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நடிகர்களின் இந்தத் தொடர் ஆதரவு தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
