கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட விபரீதத்தில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு போட்டியிடும் அமைச்சர் சி.வி.கணேசனுக்கு ஆதரவாக விசிக தலைவர் திருமாவளவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அஜித் என்ற இளைஞர், கட்சிக் கொடி கட்டப்பட்டிருந்த இரும்பு கம்பியைப் பிடித்துள்ளார். எதிர்பாராத விதமாக அந்தக் கம்பி அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது உரசியதில், மின்சாரம் பாய்ந்து அஜித் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் அந்த இடமே போர்க்களமானது. ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரின் உடலைப் பார்த்த உறவினர்கள் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்தது.
