மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகே உள்ள பரத்வாடா பகுதியில் அரங்கேறியுள்ள பாலியல் மோசடி வழக்கு, மாநிலத்தையே உலுக்கி வருகிறது. இந்த வழக்கில் கைதான முக்கிய குற்றவாளியான அயான் என்பவனை விசாரித்ததில், அடுத்தடுத்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண்களை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் செல்லும் அயான், வாடகை பிளாட்கள் மட்டுமின்றி, நகரில் உள்ள சில கஃபே (Cafe) உணவகங்களையும் தனது வக்கிரம் தீர்க்கும் இடமாகப் பயன்படுத்தியுள்ளார்.
வெறும் 400 ரூபாய் கொடுத்தால் காதலர்கள் தனிமையில் அமர கஃபேக்களில் கொடுக்கப்படும் ‘பிரைவேட் கம்பார்ட்மென்ட்’ வசதியைப் பயன்படுத்தி, அங்கு பெண்களைச் சீரழித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மோசடி வலை பிளாட், கஃபே கடந்து அணைப் பகுதிகள் வரை நீண்டுள்ளதால், இதில் இன்னும் பல முக்கிய புள்ளிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
