டெல்லியில் 500-க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, பல கோடி ரூபாய் மோசடி செய்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழக மோசடி மன்னனை டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தின் பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் குமார் என்பவர், டேட்டிங் மற்றும் மேட்ரிமோனியல் செயலிகளில் மருத்துவர், வழக்கறிஞர், சினிமா தயாரிப்பாளர் எனப் போலியான அடையாளங்களுடன் வலம் வந்துள்ளார்.
பெண்களைத் தனது வசீகரப் பேச்சால் மயக்கி, நேரில் சந்திப்பதாகக் கூறி ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.
பின்னர் அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து மிரட்டி, இதுவரை சுமார் 2 கோடி ரூபாய் வரை பறித்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் புகாரின் பேரில் வலைவீசித் தேடிய போலீசார், தற்போது இந்த கில்லாடி மோசடி பேர்வழியைப் பிடித்துள்ளனர்.
