மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு கல்லூரியில் நடந்த ஜிவாஜி பல்கலைக்கழகத் தேர்வின் போது, அதிர்ச்சியூட்டும் முறைகேடு ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேர்வு மையத்திற்குள் அமர்ந்து தேர்வு எழுத வேண்டிய மாணவர் ஒருவர், கல்லூரிக்கு வெளியே உள்ள ஒரு விளைநிலத்தில் அமர்ந்து தனது விடைத்தாளில் விடைகளை எழுதிக்கொண்டிருந்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது.

அந்த மாணவர் தனது பாடப்புத்தகத்தைப் பார்த்து விடைகளை எழுதிக்கொண்டிருந்ததை அப்பகுதி விவசாயிகள் கவனித்து வீடியோ எடுத்துள்ளனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, அந்த மாணவர் மீண்டும் கல்லூரிக்குள் நுழைய நிர்வாகம் தடை விதித்தது.
<a href=”http://

“>

இருப்பினும், இந்த முறைகேடு புகாரை அந்த தேர்வு மையத்தின் பொறுப்பாளர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது கல்லூரிக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்று கூறிய அவர், தேர்வு மையத்தில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று வாதிட்டுள்ளார். ஆனால், விடைத்தாளின் எண்களைச் சரிபார்க்கக் கோரியபோது விரிவான தகவல்களைத் தர அவர் மறுத்துவிட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில்,  அதிகாரிகள் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.