மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை பாஜக அரசு குறிவைப்பதாக மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். “ஜம்மு – காஷ்மீரை எப்படி அதிகாரமற்ற யூனியன் பிரதேசமாக மாற்றினார்களோ, அதேபோலத் தமிழ்நாட்டையும் அதிகாரமற்ற மாநிலமாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது” என அவர் பேசியது நாடாளுமன்றத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அனைத்து மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, ஒட்டுமொத்த அதிகாரத்தையும் டெல்லிக்குக் கொண்டு செல்வதே இந்த மசோதாவின் நோக்கம் என அவர் சாடியுள்ளார்.

​தொடர்ந்து பேசிய ராகுல், ஜம்மு காஷ்மீர் மாடலை நாடு முழுவதும் கொண்டு வர பாஜக துடிப்பதாக எச்சரித்தார். தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தென்மாநிலங்களின் அரசியல் பலத்தைக் குறைக்க நடக்கும் இந்த முயற்சி, கூட்டாட்சி தத்துவத்திற்கே விடப்பட்ட சவால் என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். ராகுல் காந்தியின் இந்த ‘காஷ்மீர் – தமிழ்நாடு’ ஒப்பீடு இப்போது தேசிய அளவில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளதோடு, சமூக வலைதளங்களிலும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.