தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தவெக-வின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள தலைவர் விஜய், தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும் கவரும் வகையிலான பிரம்மாண்டமான வாக்குறுதிகளை அள்ளிவீசியுள்ளார்.

குறிப்பாக, கல்வித் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், மாணவர்களின் பள்ளி இடைநிற்றலைத் தடுக்கப் பெற்றோருக்கு ஆண்டுதோறும் ₹15,000 வழங்கப்படும் என்றும், தமிழகம் முழுவதும் 100 ‘காமராஜர் மாதிரிப் பள்ளிகள்’ உருவாக்கப்படும் என்றும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி, பெண்களுக்கு மாதம் ₹2,500, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹25 லட்சம் மதிப்பிலான விரிவான மருத்துவக் காப்பீடு எனப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களைக் குறிவைத்து விஜய் தனது தேர்தல் வியூகத்தை வகுத்துள்ளார்.

வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், விஜய்யின் இந்த ‘மெகா’ தேர்தல் அறிக்கை தமிழக அரசியலில் ஒரு புதிய விவாதத்தையே கிளப்பியுள்ளது.