தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமையான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் விஜய், “திமுக, அதிமுக போன்ற கட்சிகளைப் போலத் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் வெற்று வாக்குறுதிகளை அள்ளிவிட மாட்டோம்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், மற்றவர்களைப் போல மக்களை ஏமாற்றத் தாங்கள் வரவில்லை என்றும் தனது அறிக்கையில் உள்ளவை அனைத்தும் செயல்படுத்தக்கூடியவை என்றும் உறுதிபடக் கூறினார்.
இது மற்றவர்களைப் போல வெறும் காகித அறிக்கை அல்ல, இது தமிழகத்தின் மாற்றத்திற்கான ஒரு புதிய தொடக்கம் என்று அவர் குறிப்பிட்டார். எளிய மக்களின் கைகளில் தேர்தல் அறிக்கையை ஒப்படைத்த விஜய், திராவிடக் கட்சிகளின் வாக்குறுதி அரசியலை மிகக் கடுமையாகச் சாடிப் பேசியது, தற்போது 2026 தேர்தல் களத்தில் மிகப்பெரிய அரசியல் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
