தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமுமான தளபதி விஜய், தனது அரசியல் பயணத்திற்காகப் பொதுமக்களிடையே சைக்கிள் பயணம் மேற்கொண்டபோது நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

பல மைல் தூரம் சைக்கிளில் பயணித்து ரசிகர்களைச் சந்தித்து வந்த விஜய்யை நோக்கி, கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென ஒரு பூங்கொத்தை வீசினார். அந்தப் பூங்கொத்து அவரது முகத்திற்கு அருகே வந்து விழுந்த வேகம், ஏதோ வெடிகுண்டு வீசப்பட்டது போன்ற ஒரு கணம் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதனால் நிலைகுலைந்த விஜய், உடனடியாகத் தனது சைக்கிளை விட்டு இறங்கிப் பாதுகாப்பு கருதி அருகே இருந்த வேனை நோக்கி வேகமாக ஓடினார். இந்தத் திடீர் செயலால் அவரது பாதுகாப்புப் படையினர் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பமும் சலசலப்பும் ஏற்பட்டது.

“>

இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவிய நிலையில், நெட்டிசன்கள் இதனைப் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர். சிலர் திரையில் வீரமாகச் செயல்படும் நடிகர் நிஜத்தில் பூங்கொத்துக்கே பயந்து ஓடுகிறார் என ‘கோழைத்தனம்’ என்று கிண்டல் செய்தாலும், விஜய்யின் தீவிர ரசிகர்கள் அவருக்கு இருக்கும் உயிருக்கு மேலான பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே அவர் அவ்வாறு செயல்பட்டதாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், சென்சார் போர்டால் இன்னும் அனுமதிக்கப்படாத விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ இணையத்தில் கசிந்துள்ள செய்தி அவரது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் களம் மற்றும் சினிமா என இரண்டிலும் விஜய்யைச் சுற்றித் தொடர்ச்சியாகப் பரபரப்புகள் நிலவி வருகின்றன.