‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரம் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்திற்கு (FEFSI) ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளதாக அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். சினிமா டிஜிட்டல் மயமாக மாறிய பிறகு, படத்தின் காப்பி ஒருவரிடம் மட்டுமே இருப்பதில்லை என்றும், இதனால் பாதுகாப்பு குறித்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

​மேலும், இந்தப் படக் கசிவு தொடர்பாகக் காவல்துறையினர் குற்றவாளிகளை மிக நெருங்கிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், “தவறு செய்தவர் எங்கள் சங்கத்தைச் சேர்ந்தவராக இருந்தால், அவர் இனி சினிமாவிலேயே இருக்க மாட்டார்” என ஆவேசமாகத் தெரிவித்தார். இந்த அதிரடி அறிவிப்பு சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.