எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், ஒட்டுமொத்த ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக படம் ரிலீசாவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்து காட்டுத்தீயாய் பரவியது. இந்த அதிர்ச்சி சம்பவத்தால் படத்தைத் தயாரித்த KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இமாலய பட்ஜெட்டில் உருவான இப்படம் இப்படி பாதியிலேயே கசிந்தது படக்குழுவினரை நிலைகுலையச் செய்துள்ளது.
இந்நிலையில், தனக்காக கோடிக்கணக்கில் முதலீடு செய்த தயாரிப்பு நிறுவனத்தை நஷ்டத்திலிருந்து மீட்க நடிகர் விஜய் அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளார். அதன்படி, ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய அதே KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொடுக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு முழுமையாகச் செல்வதற்கு முன் விஜய் காட்டும் இந்த மனிதாபிமானம் மற்றும் பெருந்தன்மை சினிமா வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
