தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா, வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்திக்கப்போவதாகப் பரவிய தகவல்கள் முற்றிலும் வதந்தி என அவரது தரப்பிலிருந்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையே விவாகரத்து தொடர்பான மனு செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், ஏப்ரல் 20-ஆம் தேதி நடிகர் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இதனால் அன்றைய தினம் சங்கீதா ஆதாரங்களுடன் செய்தியாளர்களைச் சந்திப்பார் எனச் சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், விஜய் தரப்பில் நடத்தப்பட்ட சமரசப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை மாற்றிக்கொண்டதாகக் கூறப்படும் நிலையில், தற்போது அத்தகைய செய்தியாளர் சந்திப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
