“அடுத்த 20 வருஷத்துக்கு நம்ம தளபதி விஜய் தான் தமிழ்நாட்டோட முதல்வர்.. இதுல எந்த மாற்றமும் இல்லப்பா!” என்று தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மதுரையில் நடைபெற்ற அக்கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.
தவெக ஆட்சி மீது எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான சட்டம் ஒழுங்கு புகார்களைக் கூறி வரும் வேளையில், அதற்குப் பளீச் பதிலடி கொடுத்துள்ள ஆனந்த், “தளபதி விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் ஊழல், கட்சி நிதி (Party fund) என்ற பேச்சுக்கே இடமில்லை; எங்களுடைய அமைச்சர்களோ அல்லது எம்.எல்.ஏ-க்களோ ஒருபோதும் தவறு செய்ய மாட்டார்கள்” என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மேலும், “கட்சி பாகுபாடின்றி மக்கள் நலன் மட்டுமே முக்கியம் எனச் செயல்படும் முதல்வர் விஜய், மீறி யாராவது தவறு செய்ததாகத் தெரிந்தால் அடுத்த நிமிஷமே அவர்களைப் பதவியில் இருந்து தூக்கி எறிவார், தப்பிக்கவே விடமாட்டார்” என்று அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
தவெக அரசின் அதிரடி திட்டங்கள் குறித்துப் பேசிய ஆனந்தின் இந்த அதிரடி பேச்சு, கோட்டை முதல் அண்ணா அறிவாலயம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் அதிமுக முகாம் வரை பெரும் அரசியல் புயலையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
