அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கம்பீரமாக வழிநடத்தப்பட்ட அதிமுக, தற்போது பாஜகவின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அது பாஜகவின் ஒரு கிளைக்கழகம் போல மாறிவிட்டதாகவும் அவர் சாடினார்.

​மேலும், இந்தத் தேர்தலில் பாஜகவின் ‘பி-டீம்’ (B-Team) ஆக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் செயல்பட்டு வருவதாக அவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்தத் தலைவர்களின் செயல்பாடுகள் மறைமுகமாக பாஜகவிற்கு உதவும் வகையிலேயே இருப்பதாக அவர் ஆவேசமாக முழங்கினார். அதிமுகவின் அனைத்து முடிவுகளையும் பாஜகவே எடுப்பதாகவும், தன்னாட்சி அதிகாரத்தை அதிமுக இழந்துவிட்டதாகவும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.