பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி, விருத்தாச்சலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த அன்புமணி ராமதாஸிற்குத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் செய்தியைக் கேட்டவுடன் நிலைகுலைந்து போன அன்புமணி, அருகில் இருந்த நிர்வாகியிடம் மிகுந்த ஆவேசத்துடன் காணப்பட்டார்.
”ஐயா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். ஐயாவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா இவர்களை நான் சும்மா விட மாட்டேன்” என்று ஆக்ரோஷமாக அன்புமணி கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தந்தை மீதான பாசத்திலும், அரசியல் அழுத்தத்திலும் அவர் வெளியிட்ட இந்த ஆவேசமான பேச்சு தற்போது பாமக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமதாஸின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் சொல்லப்பட்டாலும், அன்புமணியின் இந்த ‘சும்மா விடமாட்டேன்’ என்ற எச்சரிக்கை யாருக்கு என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.
