இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா சென்ற ‘முஸ்கான்’ என்ற இளம்பெண், அங்கு பகுதி நேரமாக ஃபுட் டெலிவரி வேலை செய்து வெறும் 4 மணி நேரத்தில் ஈட்டிய வருமானம் இப்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக் ஆகியுள்ளது. வெறும் இரண்டரை மணி நேரத்திலேயே 74 டாலர்களை அள்ளிய இவர், அன்றைய நாள் முடிவில் இந்திய மதிப்பில் சுமார் 8,000 ரூபாயைச் சம்பாதித்துள்ளார். கையில் ஒரு மொபைல் போன், ஒரு வண்டி இருந்தால் போதும், வெளிநாட்டில் எவ்வளவு கெத்தாகச் சம்பாதிக்கலாம் என்பதை முஸ்கான் தனது வீடியோவில் விளக்கியுள்ளார்.

​ஆரம்பத்தில் ஒரு கேஎப்சி ஆர்டரில் தொடங்கி, பின்னர் வரிசையாகக் கிடைத்த ஆர்டர்கள் மூலம் குறுகிய நேரத்தில் இவ்வளவு பெரிய தொகையை ஈட்டியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வேலையை முடித்துவிட்டுச் சோர்வடையாமல், ஒரு ஏரிக்கரையில் அமர்ந்து அவர் ரிலாக்ஸ் செய்யும் காட்சிகள் “வெளிநாட்டு வாழ்க்கை இவ்வளவு ஜாலியா?” எனப் பலரையும் ஏங்க வைத்துள்ளது. கஷ்டப்பட்டுப் படிக்கப் போகும் இடத்தில், இவ்வளவு துணிச்சலாகவும் புத்திசாலித்தனமாகவும் சம்பாதிக்கும் இந்த இந்தியப் பெண்ணின் வீடியோவுக்குத் தற்போது லைக்குகள் குவிந்து வருகின்றன.