மாம்பழ மண்டியில் வியாபாரிகள் பேசிக்கொள்ளாமல், கையில் ஒரு துணியைப் போட்டுக்கொண்டு ரகசியமாகச் சைகை செய்து வியாபாரம் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பார்த்தால் சாதாரண மார்க்கெட் போலத் தெரிந்தாலும், ஒரு நபர் துணியை ஏந்தியபடி ஒவ்வொரு வியாபாரியின் கையைப் பிடித்து ஏதோ ரகசியம் பேசுகிறார்.
வெளியில் இருப்பவர்களுக்குப் புரியாத வகையில், துணிக்கு அடியில் விரல்களை வைத்து சைகை செய்வதன் மூலம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இது எதற்காகத் தெரியுமா? அருகில் இருக்கும் மற்ற போட்டி வியாபாரிகளுக்கு விலையைத் தெரியாமல் மறைக்கத்தான் இந்த பழங்கால உத்தி பயன்படுத்தப்படுகிறது.
பேச்சு மூச்சில்லாமல் வெறும் விரல் அசைவிலேயே லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான டீல் பேசி முடிக்கப்படுவது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வீடியோவின் இறுதியில் இருவர் கைகளைத் தட்டி ‘டீல் ஓகே’ சொல்வதோடு இந்த ரகசியப் பரிமாற்றம் முடிவுக்கு வருகிறது.
मंडी में towel के नीचे होने वाली ये silent bargaining बड़ी दिलचस्प होती है 🤫
बिना बोले सिर्फ उंगलियों से रेट तय – तेजी, समझदारी और सीक्रेसी का खेल। pic.twitter.com/imTCL7GxLj
— Nightmare of Haters 😎 (@imTrueIndia1) April 10, 2026
இந்தக் காலத்திலும் இப்படியொரு மர்மமான ட்ரேடிங் முறை புழக்கத்தில் இருப்பதைப் பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். “இதை புரிஞ்சிக்கவே தனி அறிவு வேணும் போல” எனப் பலரும் கமெண்ட் செய்து வரும் இந்த விசித்திர வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
