பீகார் மாநிலம் பாட்னாவில், வெறும் 4 அடி 4 இன்ச் (52 இன்ச்) அகலமுள்ள நிலத்தில் ஒருவர் பிரம்மாண்டமான ஒரு வீட்டைக் கட்டி அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளார். சுமார் 50 அடி நீளமுள்ள இந்த குறுகலான இடத்தில், எந்தவொரு சிவில் இன்ஜினியரின் உதவியும் இல்லாமல் உரிமையாளரே திட்டமிட்டு இந்த அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார். “இவ்வளவு சின்ன இடத்துல வீடு கட்ட முடியாது, காசை வேஸ்ட் பண்ணாதீங்க” என ஆரம்பத்தில் கேலி செய்தவர்களின் வாயை அடைக்கும் வகையில், இப்போது இந்த வீடு ஒரு சுற்றுலாத் தலமாகவே மாறிவிட்டது.
இந்த வீட்டிற்குள் சென்றால் இன்னும் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. கைகளைக்கூட முழுமையாக விரிக்க முடியாத அளவுக்கு குறுகலான இடமாக இருந்தாலும், அதற்குள் ஒரு அழகான கோயில், பெட்ரூம், கிச்சன் மற்றும் பாத்ரூம் என ஒரு குடும்பத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் அமைத்துள்ளார். ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய குறுகிய படிக்கட்டுகள் வழியாக மாடிக்குச் செல்லலாம். இன்ஜினியரிங் விதிகளையே தலைகீழாக மாற்றிய இந்த ‘மெல்லிய’ வீட்டின் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பல மில்லியன் பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
