காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோ நிகழ்ச்சியில், கடும் வெயில் காரணமாக பெண் உட்பட 3 பேர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதியம் 12 மணி முதல் 2:30 மணி வரை பரப்புரைக்கு அனுமதி பெறப்பட்டிருந்த நிலையில், விஜய் அந்த இடத்திற்கு வந்து சேரவே பிற்பகல் 2:30 மணிக்கு மேலாகிவிட்டது.
நீண்ட நேரமாக உச்சி வெயிலில் காத்திருந்ததால் வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் தொண்டர்கள் மயக்கமடைந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவிய நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். விஜய்யின் வருகை தாமதமானதும், வெயிலின் கொடுமையுமே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
