பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில், வெறும் 10 ரூபாய் பயணக்கட்டணத் தகராறில் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பீகார் ஷெரீப் பகுதியிலிருந்து சர்மேரா நோக்கிச் சென்ற ஒரு தனியார் பேருந்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
பேருந்தில் ஏறிய இளைஞர் ஒருவர் முஸ்தபாபூர் மால்டி கிராமத்தில் இறங்க வேண்டியிருந்தது. அந்தப் பயணத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமான 20 ரூபாயை நடத்துநர் கேட்டபோது, அந்த இளைஞர் வெறும் 10 ரூபாய் மட்டுமே தருவேன் என அடம்பிடித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கியுள்ளது.
இந்தச் சிறிய தகராறு திடீரென வன்முறையாக மாறியது. அந்த இளைஞருடன் சேர்ந்த ஒரு கும்பல், பேருந்து நடத்துநரையும் ஓட்டுநரையும் இரக்கமின்றித் தாக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. நடுரோட்டில் அரங்கேறிய இந்த ரவுடித்தனமான செயல் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
10 रुपये के लिए कंडक्टर की बेरहमी से पिटाई
बिहार के नालंदा जिले के बिहारशरीफ अंतर्गत अस्थावां थाना क्षेत्र से सरेआम गुंडागर्दी का एक सनसनीखेज वीडियो सामने आया है, वीडियो में कुछ लोग एक बस चालक और कंडक्टर के साथ बेरहमी से मारपीट करते दिखाई दे रहे हैं, जांच में सामने आया है कि यह… pic.twitter.com/n6zq0Wcxj4
— NDTV India (@ndtvindia) April 9, 2026
“>
இது குறித்து அஸ்தவான் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெறும் பத்து ரூபாய்க்காக ஒருவரை இப்படி மிருகத்தனமாகத் தாக்கிய சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
