சென்னை சைதாப்பேட்டையில் அமமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் மின்கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

மழைநீர் வடிகால் பணிகள் சரியாக செய்யப்படாததால் சென்னை மக்கள் பாதிக்கப்படுவதாகவும், திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை மட்டுமே நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதற்கு திமுக அரசே துணை நிற்பதாகவும் எடப்பாடி பழனிசாமி சாடினார்.

அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் கஞ்சா ஒழிக்கப்படும் என உறுதி அளித்த அவர், கல்விக்கடன் ரத்து, சிலிண்டர் மானியம் போன்ற திட்டங்களை திமுக செய்யத் தவறிவிட்டதாகக் கூறினார். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.