தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் நேற்று மேற்கொண்ட அனல் பறக்கும் பிரச்சாரத்தின் போது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. மக்கள் வெள்ளத்தில் வேனில் சென்று கொண்டிருந்த விஜய், அங்கு வந்த சிறுவன் ஒருவனை மிகுந்த பாசத்துடன் தனது தோளில் தூக்கிச் சுமந்து உற்சாகப்படுத்தினார். இந்தத் தற்செயலான அன்புச் செயல், அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
சிறுவனை தூக்கி சுமந்த விஜய்
இணையத்தில் வைரலாகும் அன்றும் இன்றும் போட்டோ#TVKVijay #MGR #CSK #TVK #Election #Update #ipl pic.twitter.com/afJYOZdDFT— The Fire Media (@thefire_media) April 8, 2026
இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் தனது பிரச்சாரத்தின் போது இதேபோல ஒரு சிறுவனைத் தோளில் சுமந்த பழைய புகைப்படத்தையும், இன்றைய விஜய்யின் புகைப்படத்தையும் இணைத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரப்பி வருகின்றனர். “அன்றும் இன்றும்” என ஒப்பிடப்படும் இந்தப் படங்கள், விஜய் மக்கள் திலகத்தின் பாதையையே பின்பற்றுகிறார் என அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. விஜய்யின் இந்த எளிமையான அணுகுமுறை தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
