தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல், நேற்று வரை மட்டும் சுமார் ₹462.74 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் (ECI) தெரிவித்துள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த மெகா வேட்டையின் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

​இதில் ₹92.07 கோடி ரொக்கப் பணமும், ₹214.38 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ₹75.76 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள், ₹2.04 கோடி மதிப்பிலான மதுபானங்கள் மற்றும் வாக்காளர்களுக்குக் கொடுக்க வைத்திருந்த ₹78.49 கோடி மதிப்பிலான இலவச பரிசுப் பொருட்கள் எனத் தேர்தல் ஆணையத்தின் பிடியில் சிக்கியுள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க இந்தச் சோதனைகள் இன்னும் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.