தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ‘தமிழக வெற்றிக் கழகம்’ தலைவர் விஜய், நெல்லை மாவட்டத்தில் இன்று பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தினார். பிரசார வாகனத்தில் நின்றபடி வீதி வீதியாகச் சென்ற விஜய்யைக் காண ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டதால் நெல்லை மாநகரமே ஸ்தம்பித்தது. பொதுமக்களின் உற்சாக வரவேற்பைப் பார்த்த விஜய், கைகளை அசைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.

​நெல்லை கேடிசி (KTC) நகரில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக இந்த ரோடு ஷோ நடைபெற்றது. தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட விஜய், தனது பேச்சின் மூலம் நெல்லை மக்களுக்கு முக்கிய வாக்குறுதிகளை அளிக்கவுள்ளார். தளபதியின் வருகையால் நெல்லை மாவட்டம் முழுவதும் தவெக தொண்டர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்து வருகிறது