தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளரான நாஞ்சில் சம்பத், அக்கட்சியின் தலைவர் விஜய்யின் தேர்தல் பரப்புரை குறித்து உற்சாகமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். விஜய்யின் பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் தானாகவே முன்வந்து பெருந்திரளாகக் கூடுவதாகக் குறிப்பிட்ட அவர், இது தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்திற்கான அறிகுறி என்று கூறியுள்ளார்.

மேலும் மற்ற கட்சிகளைப் போல ஆட்களைத் திரட்ட வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை என்றும், விஜய்யின் நேர்மையும், மக்களின் மீதான அக்கறையுமே இளைஞர்களையும் பொதுமக்களையும் அவர் பக்கம் ஈர்க்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விஜய்யின் எழுச்சியைக் கண்டு திராவிடக் கட்சிகள் அஞ்சுவதாகத் தெரிவித்த நாஞ்சில் சம்பத், தமிழக மக்கள் இப்போது ஒரு தெளிவான மாற்றத்தை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தவெக-வின் கொள்கைகளும் விஜய்யின் அரசியல் அணுகுமுறையும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அக்கட்சி ஈட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். விஜய்யின் பரப்புரை நடைபெறும் இடமெல்லாம் மக்கள் கடலாகக் காட்சி அளிப்பது, அவர் மீதான மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக நாஞ்சில் சம்பத் தன் உரையில் பதிவு செய்துள்ளார்.