சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,720 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,13,600 ரூபாய்க்கும் ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து ஒரு கிராம் 15,491 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,13,928 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விளையும் இன்று கிராமுக்கு 10 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.