தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைக்கவோ அல்லது தடை செய்யவோ கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தலின் போது சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வெறும் யூகத்தின் அடிப்படையில் தொடரப்பட்ட இந்த வழக்கைத் தொடர முடியாது என அதிரடியாகக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.

ஏற்கனவே சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் எந்தவித விதிமீறல்களும் நடக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், திட்டமிட்டபடி 2-வது போட்டியையும் ரசிகர்கள் கண்டு மகிழலாம் எனத் தெரிவித்துள்ளனர். இதனால் ஐபிஎல் போட்டிகள் தடையின்றி நடப்பது உறுதியாகியுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.