மும்பை பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில், நாய் ஒன்று வாகனத்தின் டயரில் சிறுநீர் கழித்ததற்காக 58 வயது நபர் ஒருவர் அந்த நாயை எட்டி உதைத்ததோடு, அதன் உரிமையாளரையும் தாக்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. ஏப்ரல் 4-ம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில், ராஜேந்திர காடேகர் என்ற நபர் நிதி கண்ணா என்ற பெண் வளர்க்கும் பீகிள் ரக நாயை அதன் வயிற்றில் ஓங்கி உதைத்துள்ளார்.

இதனைத் தட்டிக்கேட்ட அந்தப் பெண்ணையும் அவர் கன்னத்தில் அறைந்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்தக் கொடூரமான காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
<a href=”http://

 

View this post on Instagram

 

A post shared by WWWF founder wildlife rescuer (@mitamalwankar_)

“>

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், போலீஸார் ராஜேந்திர காடேகர் மீது விலங்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வாயில்லா ஜீவனைத் துன்புறுத்தியதோடு பெண்ணிடமும் வன்முறையில் ஈடுபட்ட அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.