சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக அரசை மிகக்கடுமையாக விமர்சித்துப் பேசினார். நாட்டின் மிகவும் பொறுப்பற்ற அரசு இதுதான் என்று கூறிய அவர், தமிழகத்தின் கடன் 10 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.

இவ்வளவு பெரிய தொகை எங்கே சென்றது என்பது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.அரசின் நிதி ஆதாரங்களை முதல்வரின் குடும்பத்தினர் தங்களின் தனிப்பட்ட நலனுக்காகப் பயன்படுத்துவதாக அவர் சாடினார்.

அரசு ஊழியர்களின் பலன்கள் மற்றும் பல்வேறு துறைகளில் ஊழல் மலிந்துவிட்டதாகவும், தி.மு.க. அரசு கூறும் முதலீட்டுத் தொகைகள் எங்கே போனது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஊழல் புகார்கள் நிறைந்த இந்த அரசு மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்றும் பியூஷ் கோயல் சென்னை பேட்டியில் வலியுறுத்தினார்.